கண்டி மெட்ரோ பஸ் சேவைக்கான வீதிகளை அடையாளம் காணும் ஆய்வு!...
News
கண்டி மெட்ரோ பஸ் சேவைக்கான வீதிகளை அடையாளம் காணும் ஆய்வு!
கண்டி மெட்ரோ பஸ் வீதியை அடையாளம் காணும் ஆய்வு இன்று போக்குவரத்து பிரதி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.
நகர பொது போக்குவரத்து சேவையினை வினைத்திறனாக்கும் நோக்கில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்பாட்டில் மேல் மாகாணத்தினை மையமாகக் கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்ற மெட்ரோ பஸ் சேவை தலைநகரை விட்டும் ஏனைய மாகாணங்களுக்காக பரவலாக்கும் திட்டத்தின் கீழ் கண்டி நகரம் மற்றும் அதனை அண்டிய உப நகரங்கள் வரைக்கும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கண்டி மெட்ரோ பஸ் போக்குவரத்திற்கான வீதியை அடையாளம் காணும் விசேட வீதியை ஆய்வு செய்யும் பணிகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (15) நடைபெற்றது.