New Updates! Fresh news just arrived.

கச்சத்தீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வ...

News

கச்சத்தீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்: தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!

May 20, 2026 2:55 pm
கச்சத்தீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்: தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயினுடைய கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியினை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராடுவதற்கு தயங்க மாட்டோம் என்று நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் யாழ் மாவட்ட மீனவ மக்கள் சார்பில் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதோடு சில விடயங்களினை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகின்றோம்.

கச்சத்தீவு இலங்கையின் சொத்து முறைப்படி இலங்கை அதனை பெற்றுக் கொண்டிருப்பதானது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தின் கடற் தொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறான சூழ்நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள்.

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இடம் பெறும் தேர்தல்களில் மீனவ மக்களினுடைய வாக்குகளினை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

இதேவேளை, தாங்கள் தமிழ்நாட்டினுடைய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சத்தீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களினை பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தினை கையில் எடுக்க நினைப்பீர்களாயின் யாழ் மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பை காட்டுவதற்கு தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டினுடைய புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களினை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களினை முன்வைக்க விரும்புகின்றோம்.

தமிழ்நாட்டிலிருந்து எல்லை தாண்டும் இந்தியமீனவர்களினால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது கடல் வளத்தினை அழிப்பதோடு எமது மீனவர்களினுடைய பல கோடி பெறுமதியான வலைகளினையும் நாசம் செய்து விட்டார்கள்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியோடு தடைகாலம் நிறைவடைவதாக அறிகின்றோம்.

ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளைகின்ற இந்திய மீனவர்களினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now