New Updates! Fresh news just arrived.

கட்டுநாயக்கவில் சிகரெட் பொதியுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர...

News

கட்டுநாயக்கவில் சிகரெட் பொதியுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது!

June 21, 2026 4:28 pm
கட்டுநாயக்கவில் சிகரெட் பொதியுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது!
ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் பொதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று காலை (21) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத பயணிகளுக்கான 'பசுமை பாதை வழியாக சிகரெட் பொதியை நாட்டிலிருந்து கடத்த முயன்றபோது, ​​சந்தேக நபர் ஒரு சீன தொழிலதிபர் என கூறப்படுகின்றது.

அவர் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கிற்கு வந்து, அங்கிருந்து இன்று காலை தாய் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

சந்தேக நபர் தனது பயணப் பெட்டியில் 88,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 440 அட்டைப் பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now