New Updates! Fresh news just arrived.

கடும் மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள...

News

கடும் மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

April 26, 2026 6:06 pm
கடும் மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள  எச்சரிக்கை!
நாட்டினுயடைய சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்புகடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now