காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் பயணம்: தங்கம் கடத்த ...
News
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் பயணம்: தங்கம் கடத்த முயன்ற 4 பயணிகள் மருத்துவப் பரிசோதனையில் சிக்கினர்!
காங்கேசன்துறை ஊடாக நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளிற்கும் மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்பிற்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து நாகைபட்டினத்திற்கு பயணிக்கும் பயணிகள் பலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 26 பயணிகளை தடுத்து ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில் நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்திலிருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.
இவ்வாறு வந்த குறித்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளில் 26 பேரை பயணிக் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைத்தனர்.
இதன்படி, தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உள்பட 9 இலங்கையரும் உள்ளடங்குகின்றனர்.
தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே நால்வர் தங்கத்தை விழுங்கி கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூ.லின்ரன்