New Updates! Fresh news just arrived.

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு! ...

News

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

January 14, 2026 1:02 pm
நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்ரூ (14) அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன் போது 14 கிலோ கிராம் எடையுள்ள ஒன்பது பொதிகள் அடங்கிய கேரளா கஞ்சாவானது மீட்கப்பட்டுள்ளது இதன் போது சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களினை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்தான மேலதிக விசாரணைகளினையும் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளினையும் மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now