கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞரின் கை துண்டான...
News
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞரின் கை துண்டானது!
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றியவாறு, கிளிநொச்சியை நோக்கி வந்த டிப்பர் வாகனம் வேறொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.
இதன்போது எதிரே வந்த மோட்டர் வண்டியை அந்த டிப்பர் மோதியதுடன் மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் இழுத்து சென்றது. இதனால் மோட்டர் சைக்கிளில் வந்த கிளிநொச்சி - பாரதி புரத்தைச்சேர்ந்த இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் துண்டாடப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்