New Updates! Fresh news just arrived.

மனைவி மற்றும் அவரது சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல்: ...

News

மனைவி மற்றும் அவரது சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல்: இருவரும் வைத்தியசாலையில் அனுமதி!

April 27, 2026 10:09 pm
மனைவி மற்றும் அவரது சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல்: இருவரும் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இன்று (27) குறித்த கத்தி குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ள நிலையில் அண்ணன் மற்றும் தங்கை என இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவன் மனைவி இடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை, திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன் தனது மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடம் இருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now