New Updates! Fresh news just arrived.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பொலிஸ் மா அதிபர் ...

News

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய!

June 14, 2026 6:38 pm
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய!
புதிதாக அமைக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையமானது இன்றையதினம் கோப்பாயில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் திறந்து வைக்கப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலையமானது இதுவரை காலமும் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் புதிய கட்டடமானது திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது. பின்னர் சம்பிரதாய பூர்வமாக பொலிஸ் நிலையானது திறந்த வைக்கப்பட்டுள்ளது. பின்னர் விருந்தினர்களின் உரைகள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பின்னர் இதுவரை காலமும் கோப்பாய் பொலிஸ் நிலையம் யார் யாருடைய தனியார் காணிகளில் இயங்தியதோ அவர்களது கட்டடங்களின் திறப்புகள் அவர்களிடமே உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி, யாழ். அரசாங்க அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now