New Updates! Fresh news just arrived.

கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக...

News

கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

August 9, 2026 10:56 pm
கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கொத்மலை காமிணி திசாநாயக்க தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணியளவில் தேக்கத்தின் வான் கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.

விநாடிக்கு சுமார் 20 கனமீட்டர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைக்கட்டு மற்றும் தேக்க செயல்பாட்டுப் பிரிவு தெரிவிக்கம் செய்துள்ளது.

இதன்காரணமாக கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் சிறிதளவு உயரக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இதுகுறித்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now