New Updates! Fresh news just arrived.

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு ...

News

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு

October 12, 2026 6:24 pm
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) மாலை 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்
பதுளை மாவட்டம்: எல்ல, பசறை

கொழும்பு மாவட்டம்: பாதுக்க

கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க மற்றும் வரக்காப்பொல

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த


இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, களவானை, இம்புல்பே, நிவித்திகலை ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now