New Updates! Fresh news just arrived.

13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக...

News

13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

September 21, 2026 7:35 pm
13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (21) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ நிலையில் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தினுடைய வலல்லாவிட, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கோகாலை மாவட்டத்தினுடைய அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல மற்றும் யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தினுடைய அம்பகமுவ, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவிற்க்கும் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தினுடைய இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அறிக்கையொன்றாய் வெளியிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now