New Updates! Fresh news just arrived.

நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புத...

News

நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு

October 26, 2026 10:54 am
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையுடனான மழை காரணமாக 8 மாவட்டங்கள் உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை (Level 1 - விழிப்புடன் இருக்குமாறு கோரல்):

காலி மாவட்டம்: தவலம

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல

களுத்துறை மாவட்டம்: மதுராவல, பேருவளை, மில்லனிய மற்றும் ஹொரணை

கண்டி மாவட்டம்: உடதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த மற்றும் உடுநுவர

கேகாலை மாவட்டம்: கேகாலை, மாவனெல்ல, தெரணியகல, வரகாப்பொல, அரநாயக்க, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை

குருநாகல் மாவட்டம்: நாரம்மல மற்றும் குருநாகல்

இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் ஓபநாயக்க

அம்பர் நிற எச்சரிக்கை (Level 2 - எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரல்):

களுத்துறை மாவட்டம்: வளல்லாவிட்ட மற்றும் புலத்சிங்ஹல

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட மற்றும் கலிகமுவ

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை மற்றும் நோர்வூட்

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த, அயகம மற்றும் நிவித்திகல

மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், ஊற்று நீர் திடீரென கலங்கலாக மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now