New Updates! Fresh news just arrived.

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை...

News

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 17, 2026 8:44 pm
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலையினை கருத்திற்கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (18) மாலை 6 மணி வரைக்கும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகள்:

நிலை 2 - எச்சரிக்கையுடன் இருங்கள் (அம்பர் நிற எச்சரிக்கை):

நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன

இரத்தினபுரி மாவட்டம்: எலபாத்த, குருவிட்டை, இரத்தினபுரி

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்லை, யட்டியாந்தோட்டை

பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, பசறை

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை

நிலை 1 - மஞ்சள் நிற எச்சரிக்கையானது (விழிப்புடன் இருங்கள்)

கேகாலை மாவட்டம்: ருவான்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, வரக்காபொல

குருநாகல் மாவட்டம்: ரிதிகம

கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, பன்வில, தும்பனை மற்றும் உடுநுவர, தெல்தோட்டை, யட்டிநுவர மற்றும் உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, உடுதும்பரை மற்றும் அக்குறணை, பூஜாப்பிட்டிய, மெததும்பரை

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோறளை, உக்குவெல, மாத்தளை

இரத்தினபுரி மாவட்டம்: அயகம, எஹெலியகொட, வெலிகேபொல மற்றும் கலவான, இம்புல்பே, நிவித்திகல மற்றும் கொலொன்ன, பெல்மதுளை

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now