New Updates! Fresh news just arrived.

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - Gu...

News

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 29, 2026 8:59 pm
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (அம்பர் எச்சரிக்கை):

இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, இரத்தினபுரி, பெல்மடுல்ல, எலபாத மற்றும் ஓபநாயக்க.

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள் எச்சரிக்கை):

காலி மாவட்டம்: தவலம, கரந்தெனிய, நியாகம, நெலுவ மற்றும் எல்பிட்டிய.

நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை.

களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புலத்சிங்ஹள

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் பலாங்கொடை.

கண்டி மாவட்டம்: உடுநுவர, யடிநுவர.

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல.

எனவே, குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் சாத்தியமான மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now