New Updates! Fresh news just arrived.

இலங்கை செலுத்தியுள்ள மிகப்பெரிய கடன் தொகை: அரசாங்கம் தகவல...

News

இலங்கை செலுத்தியுள்ள மிகப்பெரிய கடன் தொகை: அரசாங்கம் தகவல்

March 28, 2026 9:24 am
இலங்கை செலுத்தியுள்ள மிகப்பெரிய கடன் தொகை: அரசாங்கம் தகவல்
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய கடன் திருப்பிச் செலுத்தல் 2025 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வழங்கிய தகவல்களின்படி 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் 3,900 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையைச் செலுத்தியுள்ளது.

2028 இலேயே அதிக கடன் செலுத்த வேண்டி வரும் எனக் கூறினாலும், அந்த ஆண்டில் செலுத்த வேண்டிய தொகை வெறும் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக சுமார் 2,100 முதல் 2,200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், அரசாங்கம் நிதி மேலதிகத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் விளக்கினார்.

அந்த ஆண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 29,300 மில்லியன் அமெரிக்க டொலர்கள். மொத்தச் செலவீனம் சுமார் 27,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக 1,700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மேலதிகத்தை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சரியான நிதி முகாமைத்துவம் காரணமாகவே இவ்வளவு பெரிய கடன் தவணையைச் செலுத்திய பின்னரும் பொருளாதாரத்தைச் சீராக பேண முடிந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now