New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரா...

News

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

September 15, 2026 3:21 pm
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!
நிந்தவூரில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) காலை நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் றியாஸ் ஆதம் அவர்கள், நிந்தவூர் பிரதேச விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, நெல் களஞ்சியசாலையின் அவசியம் தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உள்ளிட்டோரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்களும் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் நெல் களஞ்சியசாலையின் தேவை மற்றும் அதற்கான தீர்வு தொடர்பான விடயம் முக்கியமாக கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான தீர்வு நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

நிந்தவூர் விவசாயிகளின் நீண்டகால தேவைக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல். சம்சுன் அலி, ஏ. இப்திகார் அஹமட், பிரதேச செயலக அதிகாரிகள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now