New Updates! Fresh news just arrived.

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு 12 வருட சிற...

News

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை!

March 5, 2026 5:42 pm
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு  12 வருட சிறைத்தண்டனை!
போலி உறுதிப்பத்திரங்களினை தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றமானது இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பொரளைப் பிரதேசத்திலுள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரத்தினை தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளினையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 வருடங்கள் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பன்னிரண்டு வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனையானது விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பன்னிரண்டு வருட சிறைத்தண்டனையினை ஏககாலத்தில் 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள சட்டத்தரணி 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளினுடைய தாய் என்பதும் வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now