New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தினால் சட்டநடவடிக்கை: அ...

News

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தினால் சட்டநடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

October 10, 2026 6:05 pm
எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தினால் சட்டநடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகத்தினை கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்துக்குள்ளாக்கினால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்ந்துள்ள போதிலும், அதற்கு இணையான சதவீதத்தில் இலங்கையில் எரிபொருளின் விலையானது உயர்த்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை உயர்வில் பெரும் பகுதியினை அரசாங்கமே மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் இதில் தெளிவுபடுத்தினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர், "எரிபொருள் விலை 10 ரூபாவினால் உயரும் போது, அரசாங்கமாக நாம் 70 ரூபாவினை மானியமாக வழங்குகின்றோம் என்பதினை யாரும் பேசுவதில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு இணையான தொகையினை நாம் இங்கு உயர்த்தவில்லை.

முன்னதாக மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கி இருந்தது. இனிவரும் மூன்று மாதங்களுக்கும் மேலும் 41 பில்லியன் ரூபாவினை மானியமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது."

"தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, குறித்த விலை உயர்வின் ஒரு பகுதியினை தாங்கிக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், சில தனியார் எரிபொருள் நிலையங்கள் விநியோகத்தினை கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றன. அவர்கள் கோரும் அளவுக்கு விலையினை உயர்த்தி நுகர்வோரைப் பாதிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்."

"ஒப்பந்தங்களின் அடிப்படையில் விலை சூத்திரம் அல்லது செலவு அடிப்படையிலான விலையேற்றத்திற்குச் செல்லவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.

இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து விநியோகத்தினை கட்டுப்படுத்தி மக்களுக்கு அசெளகரியத்தினை ஏற்படுத்தினால் சட்டப்படி எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளினையும் எடுப்போம்.

முதலீட்டாளர்களினை பாதிப்பது எங்கள் நோக்கமல்ல; அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதினையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என அமைச்சர் மேலும்,உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now