New Updates! Fresh news just arrived.

2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிட...

News

2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

January 18, 2026 12:45 pm
2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!
இலங்கை மின்சார சபையினுடைய மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருக்கும் 2,200 ஊழியர்களினுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்கலினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடிதத்தின் ஊடாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது:

வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறுவதற்குத் தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும், அதற்கமைய தங்களினுடைய வருங்கால வாழ்வாதார வழிகளினைத் திட்டமிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமடைந்து வருவதினால், தாங்கள் கடும் மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மின்சார சபையானது கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படும் வரைக்கும், சபையில் இருந்து விலகித் தங்களது புதிய திட்டங்களினைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த திகதியை அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே தனது பதவி விலகல் கடிதத்தின் மூலமும் அறிவித்துள்ளதினை ஊழியர்கள் அந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now