New Updates! Fresh news just arrived.

6 வருடங்களாக விநியோகிக்காத கடிதங்கள் : அஞ்சல் ஊழியர் கைது...

News

6 வருடங்களாக விநியோகிக்காத கடிதங்கள் : அஞ்சல் ஊழியர் கைது

October 21, 2026 9:06 pm
6 வருடங்களாக விநியோகிக்காத கடிதங்கள் : அஞ்சல் ஊழியர் கைது
6 வருடங்களுக்கும் மேலாக விநியோகிக்கப்படாத 2,082 கடிதங்களைத் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ஹல்துமுல்லை பகுதியை சேர்ந்த
42 வயதுடைய அஞ்சல் ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டை நேற்று (20) சோதனையிட்டபோதே குறித்த கடிதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 2,065 சாதாரண கடிதங்களாகும், 17 பதிவுத் தபால்களாகும்.

அதில் அரச நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள், நீதிமன்ற அறிவித்தல்கள் அத்தோடு வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உரிய முறையில் சொரகுணை, ஹல்துமுல்லை மற்றும் ஹரங்கஹாவ பகுதிகளில் விநியோகிப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட கடிதங்களை
விநியோகிக்கத் தவறிய
குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(21) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர் 200,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now