விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு: விசாரணை ம...
News
விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு: விசாரணை முன்னெடுப்பு!
அம்பாறை மாவட்டத்தின், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்றினை விசேட அதிரடிப்படையினர் (STF) கடந்த திங்கட்கிழமை (29) மாலை மீட்டிருந்தனர்.
இதன்படி, திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய காட்டுப் பகுதியில் குறித்த விசேட ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காட்டுப் பகுதியிலிருந்த பெரிய மரப்பொந்து ஒன்றினுள் மிகவும் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ் அதிநவீன ஸ்னைப்பர் ரக துப்பாக்கியும், அதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ஏழு (07) தோட்டாக்களும் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கஞ்சிகுடியாறு பகுதியைக் கண்காணிக்கும் தமண (Damana) பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை மேற்கொண்டனர்.
மேலும், யுத்தம் நடந்து பல வருடங்களான நிலையில், குறித்த ஆயுதமானது அங்கு எவ்வாறு வந்தது? அண்மைக் காலத்தில் யாரேனும் அதனை அங்கு மறைத்து வைத்தார்களா? அல்லது யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டதா என்கின்ற கோணங்களில் பாதுகாப்பு பிரிவினரும் தமண பொலிஸாரும் இணைந்து விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்