New Updates! Fresh news just arrived.

லிட்ரோ கேஸ் நிறுவனம் விசேட அறிவிப்பு

News

லிட்ரோ கேஸ் நிறுவனம் விசேட அறிவிப்பு

February 23, 2026 9:32 am
லிட்ரோ கேஸ் நிறுவனம் விசேட அறிவிப்பு
சந்தையில் நிலவிய எரிவாயுத் தட்டுப்பாடு தொடர்பில் லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளதுடன், நுகர்வோர் அச்சமடைந்து தேவையற்ற முறையில் எரிவாயுவைச் சேமிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி,

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இரண்டு நாள் தடை மற்றும் சந்தையில் திடீரென அதிகரித்த கேள்வி காரணமாகவே இந்தத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண விநியோக நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதற்காக லிட்ரோ நிறுவனம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெப்ரவரி 17, 18 ஆம் திகதிகளில் ஏற்கனவே 284,000 சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை (19) முதல் சனிக்கிழமை (21) வரையான காலப்பகுதிக்குள் மேலும் 351,000 சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து சீராகவும் தட்டுப்பாடின்றியும் முன்னெடுப்பதற்காக, இம்மாத இறுதிக்குள் மேலும் மூன்று எரிவாயுத் தொகுதிகள் இலங்கைக்கு வரவுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now