New Updates! Fresh news just arrived.

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறி...

News

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

October 16, 2026 7:30 pm
எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!
நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்குள் விநியோகத்திற்குத் தேவையான 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைச் சுமந்து வந்துள்ள 'GAS GOODWILL' கப்பலின் எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எதிர்வரும் சில நாட்களில் தினசரி தேவையை விட அதிகமாக, அதாவது 80,000 முதல் 100,000 வரையிலான 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை தினசரி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைச் சுமந்துள்ள 'FRANCOIS' என்ற கப்பல் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், இந்த விநியோகச் சரக்குகள் கிடைப்பதன் மூலம் நாட்டில் எரிவாயு விநியோகம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, சந்தைக்கு வழமை போல் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now