New Updates! Fresh news just arrived.

அஸ்வெசும பயனாளிகளுக்கு தொழில் வழங்கினால் சமூர்த்தியூடாக க...

News

அஸ்வெசும பயனாளிகளுக்கு தொழில் வழங்கினால் சமூர்த்தியூடாக கடன்!

November 12, 2026 7:32 pm
அஸ்வெசும பயனாளிகளுக்கு தொழில் வழங்கினால் சமூர்த்தியூடாக கடன்!
கிராமிய தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, தொழில்முயற்சியாளர்களுக்கு சமூர்த்தி வங்கி ஊடாக உயர்ந்த பட்சம் 5 மில்லியன் ரூபா வரை கடன் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த கடனை 4% வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமை பெறுவதற்கு குறித்த தொழில் முயற்சியாளர்கள் குறைந்தபட்சம் 5 அஸ்வெசும பயனாளிகளுக்கேனும் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல் கட்டாயமாகும்.

இதற்காக வட்டி நிவாரணத்திற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் 5,000 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now