முன்னாள் அமைச்சரால் யாழில் கௌரவிக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்!...
News
முன்னாள் அமைச்சரால் யாழில் கௌரவிக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்!
யாழ். மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களினுடைய கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக அண்மையில் கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார் (அண்ணாவியார்)அவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினுடைய செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பிறந்து வாழ்ந்து தனது பிரதேசத்தில் "வேணுகான சபா மன்றத்தின்" மூலமாக கலை கலாசார பண்பாடுகளினை வளர்த்து பாதுகாத்து வந்த அண்ணாவியார் கிராமிய நாடக இசைத்துறையில் பல தரப்பட்டவர்களினால் பல்வேறு விருதுகளினை பெற்றுக் கௌரவிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் தற்போது அண்ணாவியாருக்கு குறித்த துறையினுடைய அதி உச்ச விருது துறைசார் அமைச்சால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்