New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி வாரம்!

News

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி வாரம்!

September 17, 2026 7:23 pm
அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி வாரம்!
'வளமான நாடு - அழகான வாழ்வு' எனும் பொருளில், 'புத்துயிர்க்கும் புதுநகரம்' உள்ளூராட்சி வார முதற்கட்ட நிகழ்வாக நடமாடும் சேவை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பொது நூலக வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை(14) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து சிறப்பித்ததுடன் பொது மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பல்துறை அரச நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இந்நடமாடும் சேவையில் அட்டாளைச் சேனை பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வனஜீவராசிகள் திணைக்களம், சமூக சேவைப் பிரிவு, பிறப்பு - இறப்பு மற்றும் திருமணப் பதிவாளர் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, சிறுவர் விவகாரப் பிரிவு, நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, அரசாங்க கால்நடை வைத்திய அலுவலகம், இலங்கை மின்சார சபை, பொலிஸ் பிரிவு, கல்முனை மாவட்ட மீன்பிடி அலுவலகம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட ஏராளமான அரச நிறுவனங்கள் பங்கேற்றுப் பொது மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கி வைத்தன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எப்.அஹமட் அப்கர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.நிஹால், முன்னாள் உதவித் தவிசாளர் எப்.நஜீத் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ்(ADE), எம்.எல்.றினாஸ், எஸ்.எம்.றியாஸ், ஐ.எல். அஸ்வர் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாமர ஜெயதிலக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் எம்.எப்.பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன். அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் யு.எல்.நியாஸி மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் , அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now