அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் ரூ.4,614 மில்லியன் இழப்பு!...
News
அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் ரூ.4,614 மில்லியன் இழப்பு!
2019 நவம்பர் முதல் 2024 ஜூலை வரையான காலப்பகுதியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவுச் சீட்டு வழங்கலில் இடம்பெற்ற முறைகேடுகளால் ரூ.4,614 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் 133.8 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 18.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு வெளியேறும் சீட்டுகள் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.