New Updates! Fresh news just arrived.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு

News

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு

November 13, 2026 10:18 pm
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு
சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தமது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இதற்கமைவாக 12.5 கிலோகிராம் நிறையை உடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,965 ரூபாவாக இருந்த குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now