New Updates! Fresh news just arrived.

4ஆவது முறையாகவும் 80 வயதில் ஜனாதிபதியானார் லூலா டா சில்வா...

News

4ஆவது முறையாகவும் 80 வயதில் ஜனாதிபதியானார் லூலா டா சில்வா !

October 26, 2026 9:39 am
4ஆவது முறையாகவும் 80 வயதில் ஜனாதிபதியானார் லூலா டா சில்வா !
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோலின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தி, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 4ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளையும், முதலாவது கட்ட தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றி, 80 வயதான லூலா டா சில்வா இந்த அதிர்ச்சி வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

1980களில் பிரேசிலில் ஜனநாயகம் திரும்பிய பிறகு, முதலாம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் முதல் தலைவராக லூலா மாறியுள்ளார்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் தீவிர வலதுசாரி கட்சிகளின் வெற்றி அலை வீசி வந்த நிலையை மாற்றி, லூலாவின் இந்த வெற்றி அந்த பிராந்தியத்தில் ஒரு முக்கிய அரசியல் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், போல்சனாரோ குடும்பத்திற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுத்துறை பிரசாரம் செய்த போதிலும், அந்த முயற்சியை முறியடித்து லூலா வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும், லூலாவின் இந்த 4ஆவது ஆட்சிக்காலம் கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணிப் பெரும்பான்மையை பெற்றுள்ளதனால், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சி நிர்வாகத்திலும் அவர் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

அத்துடன், நாட்டின் அதிகரிக்கும் கடன் சுமை (மொ.தே. உ 82%க்கும் மேல்) மற்றும் 2.3% ஆக எதிர்பார்க்கப்படும் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவையும் லூலாவின் புதிய ஆட்சிக் காலத்தில் முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now