சொகுசு பேருந்துக்கள் விசேட சோதனை நடவடிக்கை!
News

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சியின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் பேருந்துகளை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
அதன்படி நேற்று மாலை (07) நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியை உள்ளடக்கும் வகையில் நானுஓயா நகரில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது,
பயணிகளிடம் அதிக பணம் வசூலிப்பது, மீதி பணத்தை தராமல் இருப்பது, டிக்கெட் வழங்காதது, அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, பஸ்சில் உள்ள பல்வேறு அலங்காரங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளிடம் இருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் போது நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரை சென்ற சொகுசு பேருந்து ஒன்றில் நடத்துனர் தலவாக்கலை வரை சென்ற பயணிகளிடம் 300 ரூபாய் பணம் அறவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மேலும் இருக்கைகளினுடைய எண்ணிக்கைக்கு மேலாக இருந்த பயணிகள் பயணம் செய்ய பேருந்துக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளினுடைய எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளினை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் குளிரூட்டப்படுதல் அவசியம் என்றும் இதன் போது சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது .
தொடர்ந்து நுவரெலியா - ஹட்டன் சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக பயணிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்தனர் .
இதன்படி விதிமீறல் இருந்த அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது .
தற்போது திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களைப் பேருந்துகளுக்குள் பயணிகளுக்கு காட்சிப்படுத்துமாறும் அவ்வாறு செய்யாத பேருந்துகளின் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வி.தீபன்ராஜ்