New Updates! Fresh news just arrived.

சொகுசு வாகன வழக்கு - ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப...

News

சொகுசு வாகன வழக்கு - ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026 11:34 am
சொகுசு வாகன வழக்கு - ஜோன்ஸ்டனுக்கு அபராதமும், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்
சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25) அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானினால் அறிவிக்கப்பட்ட குறித்த தீர்ப்பிற்கமைய, முதலாவது குற்றச்சாட்டிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டிற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now