New Updates! Fresh news just arrived.

மஹர சிறை பதற்றம்: ஒருவர் பலி!

News

மஹர சிறை பதற்றம்: ஒருவர் பலி!

August 1, 2026 7:54 pm
மஹர சிறை பதற்றம்: ஒருவர் பலி!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களமானது தெரிவித்துள்ளது.

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலையின் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த பதற்றநிலையின் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையினுடைய பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்திருப்பதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளினை பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களானது கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமான எவ்வித அறிவிப்பினையும் வெளியிடவிவ்லை.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now