இலங்கை கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றம்; பிரதமர் வெளியிட...
News
இலங்கை கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றம்; பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் மனனம் செய்து பரீட்சை எழுதும் கல்வி முறையிலிருந்து விலகி, நடைமுறை அறிவு மற்றும் திறன்களை மையமாகக் கொண்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை வித்யாலோக மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய அவர், 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்ட ஆயத்தங்களும் தற்போது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
பாடசாலையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு மாணவரும் தமது திறமைகளுக்கு ஏற்ற தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறும் வகையில் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என்றும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகக் கல்விக்கு வழங்கப்படும் மதிப்பைப் போலவே தொழிற்கல்விக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
உலகை விமர்சன ரீதியாக சிந்திக்கும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிவையும் திறம்பட கையாளக்கூடிய மாணவர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.