New Updates! Fresh news just arrived.

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் ...

News

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமனம்!

November 2, 2026 6:00 pm
கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமனம்!
கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக (District Commissioner) மேஜர் கே. எம். தமீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனமானது கல்முனை சாரணிய மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், பிராந்திய சாரணிய இயக்கத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் புதிய உத்வேகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கும் முக்கியமானதொரு நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

சாரணிய இயக்கத்தின் உயர் வளர்ச்சியில் சிறந்த தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை முதன்மையான பங்கு வகிக்கும் நிலையில், மேஜர் கே. எம். தமீம் சிறந்த வழிகாட்டலின் கீழ் கல்முனை சாரணிய மாவட்டத்தின் கட்டமைப்பு மற்றும் களச் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், பிராந்திய இளைஞர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவத் திறன், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகளை மேம்படுத்துவதிலும் அவரது அனுபவமிக்க பங்களிப்பு சிறப்பாக அமையும் எனப் பல தரப்பினராலும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராகப் பொறுப்பேற்கும் மேஜர் கே. எம். தமீம் அவர்களுக்குப் பிராந்திய சாரணியர்கள், சாரணியத் தலைவர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now