சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் க...
News
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது
சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை முகாமைத்துவம் செய்து, அந்தத் தடைசெய்யப்பட்ட பிரமிட்ʽ திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த நபர்களின் குற்றவியல் நம்பிக்கையை மீறியது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க, நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் செல்வது, பணம் உழைப்பது, மேம்படுத்துவது, பிரபல்யப்படுத்துவது மற்றும் முகாமைத்துவம் செய்வது அத்துடன் அதில் பணத்தை முதலீடு செய்த நபர்களின் குற்றவியல் நம்பிக்கையை மீறியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.