நானுஓயாவில் மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது! ...
News
நானுஓயாவில் மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளினை காண்பித்த குற்றச்சாட்டில் நேற்று (20) சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நானுஓயா காவல்துறையினுடைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.
இதன்படி, பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு குறித்த சந்தேக நபர் ஆபாச காணொளிகளினை காண்பித்ததாக நானுஓயா பகுதியிலுள்ள பல பாடசாலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தினை பதிவு செய்த நிலையில் நானுஓயா பகுதியினை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளினுடைய தந்தையான சந்தேக நபரினை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
நானுஓயா காவல்துறை மகளிர் பணியகத்தினுடைய பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி (2435) மற்றும் அவரது காவல்துறை அதிகாரிகள், நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை குழந்தைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் இதன் போதோ இவ்வாறான புகார்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்
மேலும், இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையினை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரிகாளிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அத்தோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற் கொண்டுவருகின்றனர்.