New Updates! Fresh news just arrived.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது! - G...

News

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

August 1, 2026 1:54 pm
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!
இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமையச் செயற்பட்ட அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now