New Updates! Fresh news just arrived.

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது! - ...

News

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

January 12, 2026 11:46 am
மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் காலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவெடிக்கையின் போது வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.780 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதி மன்றத்தில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசால் முற் படுத்தப்பட்டது

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேக பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கினார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now