New Updates! Fresh news just arrived.

நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவுடன் நெல்லியடி விசேட அதிர...

News

நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவுடன் நெல்லியடி விசேட அதிரடிப் படையால் ஒருவர் கைது!

February 23, 2026 7:55 pm
நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவுடன் நெல்லியடி விசேட அதிரடிப் படையால் ஒருவர் கைது!
நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவோடு, நெல்லியடி விசேட அதிரடிப் படையியால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் இன்று (23) கேரள கஞ்சாவோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நெல்லியடி விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 1Kg 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரினை கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்

இதேவேளை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபரை விசாரித்து வரும் நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தவுள்ளனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now