New Updates! Fresh news just arrived.

8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! - Gur...

News

8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

January 25, 2026 10:38 am
8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பெருமளவான குஷ் போதைப்பொருளினை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரினை இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் 37 வயதுடையவர் எனவும், அவர் இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வருபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளிலும், 8 பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் 220 கிராம் குஷ் போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளானது சுமார் 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட விமானப் பயணியையும் போதைப்பொருளினையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now