New Updates! Fresh news just arrived.

எல் நினோ தாக்கம் தொடர்பில் முகாமைத்துவக் குழுக் கூட்டம்! ...

News

எல் நினோ தாக்கம் தொடர்பில் முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

September 19, 2026 9:58 pm
எல் நினோ தாக்கம் தொடர்பில் முகாமைத்துவக் குழுக் கூட்டம்!
கள்ளியாடி கிராம உத்தியோகத்தர் பிரிவு (MN/06) இல் இன்று (19) கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. T. N. சூரியராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான தயார்நிலை மற்றும் எல் நினோ (El Niño) நிலைமையினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்தத் தயார்நிலை, முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்றுதல், அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் சமூக மட்ட ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

கள்ளியாடி கிராம உத்தியோகத்தர், M/கள்ளியாடி G.T.M.S. பாடசாலை அதிபர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய தொடர்புடைய சமூக மட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு சமூக மட்டத்தில் தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் உரிய நேரத்தில் துரிதமான பதிலளிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now