New Updates! Fresh news just arrived.

மாவடிப்பள்ளி பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

News

மாவடிப்பள்ளி பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

March 7, 2026 10:44 pm
மாவடிப்பள்ளி பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!
அறுவடை இயந்திரத்தினை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியினுடைய சடலம் காரைதீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர உதயபுர பகுதியினை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி, உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலமானது மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முகப்பகுதி சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதோடு, மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now