New Updates! Fresh news just arrived.

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் சேர்ப்படவுள்ள பல ...

News

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் சேர்ப்படவுள்ள பல புதிய அனுகூலங்கள்!

October 20, 2026 7:03 pm
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் சேர்ப்படவுள்ள பல புதிய அனுகூலங்கள்!
2026/2027 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவுள்ள சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களினை சேர்ப்பதற்கு அமைச்சரவையானது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, செவிப்புலன் கருவிகளினை (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரைக்கும் அனுகூலங்களை வழங்குவதற்கும், நாட்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துககளினை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வரைக்கும் அனுகூலங்களை வழங்குவதற்கும் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தோற் புற்றுநோயினை கண்டறிதல் உள்ளிட்ட பெயரிடப்பட்ட சிறப்பு நோய் பரிசோதனைகளுக்காக 20,000 ரூபா வரைக்கும் அனுகூலங்களை வழங்குவதற்கும் யோசனையானது முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தீவிர நோய்கள் பிரிவின் கீழ் அடங்கும் நன்மைகளும் விரிவாக்கப்பட்டுள்ளதுடன், புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய பரிசோதனைகள், PET Scan பரிசோதனைகள் மற்றும் திடீர் விபத்துக்களின் காரணமாக மேற்கொள்ளப்படும் சில மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

தவிர, கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் கல்விக் சுற்றுலாக்கள் மற்றும் விளையாட்டு விழாக்கள் உள்ளிட்ட செயற்பாடுகளின் போது ஏற்படும் திடீர் விபத்துக்களால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால் 100,000 ரூபாய் நன்மையினை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2026 செப்டம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் 2027 ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு அமைவாக குறித்த புதிய அனுகூலங்களை உள்ளடக்கி சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தினை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள், விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு குறித்த திட்டத்தின் கீழ் அனுகூலங்கள் கிடைக்கும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now