New Updates! Fresh news just arrived.

பெரியநீலாவனை தொடக்கம் காரைதீவு வரையிலான பிராந்தியங்களை உள...

News

பெரியநீலாவனை தொடக்கம் காரைதீவு வரையிலான பிராந்தியங்களை உள்ளடக்கிப் பாரிய அபிவிருத்தி நடவடிக்கை!

October 13, 2026 6:00 pm
பெரியநீலாவனை தொடக்கம் காரைதீவு வரையிலான பிராந்தியங்களை உள்ளடக்கிப் பாரிய அபிவிருத்தி நடவடிக்கை!
இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களினை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடான "கல்முனை - காரைதீவு நகராக்கம்" எதிர்வருகின்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில் முக்கிய ஆரம்பக் கட்ட மீளாய்வுக் கலந்துரையாடல் பிநேற்று திங்கட்கிழமை (12) கல்முனை மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய (UDA) ஏற்பாட்டில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரதியமைச்சரான வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினகிய அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விரிவான உரையாடல்களினை மேற்கொண்டனர்.

"Life City" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த "கல்முனை - காரைதீவு நகராக்கம்" திட்டமானது, பெரியநீலாவனை, மருதமுனை,பாண்டிருப்பு,கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு கிழக்கிலங்கையினுடைய முக்கிய வர்த்தக மற்றும் வாழ்விடப் பகுதிகளாகிய பின்வரும் பிரதேசங்களினை உள்ளடக்கியதாக அமையவுள்ளது:

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், துறைசார் திணைக்களங்களினுடைய தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, நகரக் கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளினையும் முன்வைத்தனர்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கல்முனை மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் கரையோரப் பிராந்தியங்களினுடைய பொருளாதார, வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் மாற்றம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now