New Updates! Fresh news just arrived.

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம...

News

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

February 19, 2026 4:26 pm
வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வாருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்குமாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 7 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், இவர்களை நாளை வாழைச்சேனை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிழக்குமாகாண குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now