New Updates! Fresh news just arrived.

தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய பண மோசடி: பொதுமக்களுக்...

News

தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய பண மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

March 28, 2026 3:05 pm
தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய பண மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைத் தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்கள் ஏமாற்றப்படும் ஒரு பாரிய நிதி மோசடி குறித்து தபால் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தபால் மூலம் வந்துள்ள ஒரு பொதியைப்பெற்றுக்கொள்வதற்கு சிறிய கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, பொதுமக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அந்தச் செய்தியில் உள்ள இணைப்பை கிளிக் செய்யும்போது, அது தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலிப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு உங்களது வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கோரப்படும். அவ்வாறு விபரங்களை வழங்கிய சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இவ்வாறான முறைப்பாடுகள் தபால் திணைக்களத்திற்கு அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது தொடர்பில் தபால் திணைக்களம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அந்நிய நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். வங்கி அட்டை விபரங்கள் அல்லது கைபேசிக்கு வரும் OTP குறியீடுகளை எக்காரணம் கொண்டும் எவருக்கும் வழங்க வேண்டாம். தபால் திணைக்களம் ஒருபோதும் குறுஞ்செய்திகள் ஊடாக வங்கி விபரங்களைக் கோருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்படுகின்மையும் குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now