மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப...
News
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப்துல் நஸார் நியமனம்!
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய பிரதி அதிபராக எம்.சி. அப்துல் நஸார் இன்று திங்கட்கிழமை (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பிரதி அதிபரை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.பி. அகமட் ராஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், நலன்விரும்பிகள், உதவி அதிபர்கள், சிரேஷ்ட பகுதி தலைவர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு புதிய பிரதி அதிபருக்கு மாலை அணிவித்து பாடசாலை சமூகத்தினர் சிறப்பான வரவேற்பை வழங்கினர்.
பிரதி அதிபர் அப்துல் நஸார்,
2005ஆம் ஆண்டு நிந்தவூர் அல்-அஷ்கர் தேசிய பாடசாலையில் ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்த இவர், பின்னர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு இலங்கை அதிபர் நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, உதவி அதிபராகவும் பின்னர் பிரதி அதிபராகவும் பதவி உயர்வு பெற்று பல பாடசாலைகளில் கல்வி நிர்வாகப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துள்ளார்.
மாணவர்களின் கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்து வந்த எம்.சி. அப்துல் நஸார் அவர்கள், தற்போது மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(மருதமுனை செய்தியாளர்)