New Updates! Fresh news just arrived.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்க...

News

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி செயலமர்வு!

November 9, 2026 6:41 pm
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி செயலமர்வு!
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR செயற்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர்வை. ராசித் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எல். நசிபா பங்குபற்றுதலுடன் கடந்த 2026.11.04 முதல் 2026.11.06 வரை மூன்று நாட்களாக இச்செயலமர்வு நடைபெற்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அ. பாத்திமா சினோஸ் இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் வளவாளர்களாக நாவிதன்வெளி பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வி. லாவன்யா மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மினா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நெறிகளை வழங்கினர்.

அத்துடன் கல்முனை உப பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. அருள்பிரசாந்தன் , கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.எஸ்.எஸ். ஹசன், அக்கரைப்பற்று பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம். சங்கீதன், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் உள்ளிட்ட பலரும் பாடசாலை மத்தியஸ்த அலகிற்குப் பொறுப்பான பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களும் இந்நிகழ்வில் உற்சாகமாகப் பங்குபற்றினர்.

இப் பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்களுக்கு முரண்பாடுகளைத் தவிர்த்தல், முறையான தொடர்பாடல் மற்றும் கலந்துரையாடல் திறன்கள் மூலம் மத்தியஸ்த செயல்முறைகளைக் கையாளும் முறைகள் பிரயோகரீதியான அறிவுடன் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வின் நிறைவாக இப்பாடசாலையில் புதிய 'பாடசாலை மத்தியஸ்த அலகு' (School Mediation Unit) உத்தியோகப்பூர்வமாக நிறுவப்பட்டதுடன், பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now