ஜனாதிபதிக்கும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கப் ப...
News
ஜனாதிபதிக்கும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினுடைய அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினுடைய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பானது இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பில்லை என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளினை எதிர்கொண்திருப்பதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களினுடைய பிரச்சினைகள் குறித்து மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தினையும் அந்தஸ்தினையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
இதன்படி, பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளினை ஆசிரியர் சேவைக்குள்வாங்குவதே அரசாங்கத்தினுடைய எதிர்பார்ப்பு எனவும், ஆகவே, ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரான கபில ஜனக பண்டார மற்றும் ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினுடைய செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.